Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“‘ரகு தாத்தா’ போன்ற படத்தை தமிழ்நாட்டில்தான் பேச முடியும்” - கீர்த்தி சுரேஷ்!

07:26 AM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

“‘ரகு தாத்தா’ போன்ற படங்களைப் பற்றி தமிழ்நாட்டில்தான் பேச முடியும். நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள்” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Advertisement

சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை
தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு படத்தின் டிரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ் ;

“எனக்கு ரொம்ப பிடித்த ஊர் மதுரை. நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர். மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை. ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும்.

பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த
படத்தில் சொல்லி இருப்போம். ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே குடும்பத்தோடு
உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும். இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு
அளிக்க வேண்டும். பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்படுகிறது. அது இன்றும் நடைபெற்று வருகிறது. இவை ஆங்காங்கே சிறு வசனங்களாகவும், காட்சிகளாகவும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

படத்தில், காலம் காலமாக வந்தால் கலாச்சாரம். திடீரென வந்தால் திணிப்பா என்ற டயலாக் இருக்கும். கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருப்போம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது.  அது காமெடியாக சொல்லியிருப்போம். இது முழுவதும் காமெடி படம் தான். இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. நடிப்பு மட்டும் தான்.

அரசியல் ஆசை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த படத்தில் இந்தி திணிப்பை பேசுவதற்காக பெண்ணை ஹீரோயினாக காட்டியுள்ளோம். பெண்களை பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது.

இன்றுவரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தி திணிப்பு
என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள். இந்த படத்தில் இந்தியை திணிக்க
கூடாது என்பதை தான் சொல்லி இருப்போம். படம் பார்த்தீர்கள் என்றால் புரியும். பொண்ணுங்க என்றால் அடக்கமாக இருக்க வேண்டும் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என பெண்கள் மீது பல்வேறு திணிப்புகள் செலுத்தப்படுகிறது. மொழியை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தை
பற்றி பேச முடியும். நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள். அதனால்தான் ரகு
தாத்தா என பெயரை குறிப்பிட்டுள்ளோம்.

எனக்கு இந்தி நன்கு தெரியும். ஆகஸ்ட் 15 அன்று நிறைய படங்கள் வருகிறது அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசை. விக்ரம் சார் நடித்துள்ள படம் வெளிவருகிறது. இரண்டு, மூன்று படங்கள் வருகிறது. எல்லா படமும் நல்லா இருக்க வேண்டும். இதில் வேறு வித காமெடி படமாக ரகு தாத்தா இருக்கும். மற்ற படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்கும்.

Tags :
hindiKeerthy SureshMS BhaskarRaghu Thatha
Advertisement
Next Article