Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே... ஒப்பனை நடவடிக்கைகளுக்காக அல்ல” - தபேதார் பணியிட மாற்றம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம்!

09:45 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதராகப் பணியாற்றி வந்த மாதவி ஆவடியிலிருந்து, மணலிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”ஒரு பெண் லிப்ஸ்டிக் போட்டு அலுவலகம் வரக்கூடாது என்பதுதான் சென்னை மாநகராட்சியின் அலுவலக நடைமுறையா?" எனவும் தபேதார் கேள்வி எழுப்பி இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அலங்காரம் தொடர்பாக தபேதார் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அரசியல் தலைவர்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காகவே தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநாகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மேயர் அலுவலகத்தில் தபேதார் ஆகப் பணிபுரிந்து வந்த எஸ்.பி. மாதவி என்பவர் தொடர்ந்து அலுவல் நடைமுறைகளை மீறியும், முறையாக அலுவலகத்திற்கு தகவல் தராமல் தாமதமாக வருதல், அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதன் காரணமாக, அலுவலக நடவடிக்கைகளின்படி கடந்த மாதம் குறிப்பாணையின் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதைத்தவிர தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அவரது தனிப்பட்ட ஒப்பனை நடவடிக்கைகளுக்காக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வரப்பெற்றுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அலுவலக நிர்வாகக் காரணங்களினால் மட்டுமே கடந்த மாதம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேயர் அலுவலகத்தில் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார் எனவும், தனியரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக பணியிட மாறுதல் செய்யப்படவில்லை எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Tags :
Greater Chennai CorporationLipstickMayor PriyaTabedar
Advertisement
Next Article