"இந்தியாவில் உயர்கல்வி பயில்வோர் 30% மட்டுமே" - முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன்
இந்தியாவில் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை 30 சதவீதம் மட்டுமே என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள கலைக் கல்லூரியில் இன்று (பிப்.05) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானிய நிலைக்குழு உறுப்பினருமான முனைவர் பஞ்சநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
இதையும் படியுங்கள்: “காங்கிரஸ் கட்சியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
"இந்தியாவில் மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. இதில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் மட்டுமே. 70 சதவீத நபர்கள் பல்வேறு காரணங்களால் உயர் கல்வியை தொடர முடியவில்லை. உயர்கல்வி கற்ற நாம், நாடு உயர பாடுபட வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.