Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது" - #SupremeCourt அதிரடி உத்தரவு!

08:36 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். இப்படி பல சேவைகளை பெற ஆதார் அவசியமாகியுள்ள நிலையில், இந்த ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். உயிரிழந்த நபரின் ஆதார் அடையாள அட்டையில் பிறந்த தேதி ஜனவரி 1, 1969 என்றும் பள்ளி இறுதி ஆண்டு சான்றிதழ் (டிசி)-ல் அக்டோபர் மாதம் 1970 என்று குறிபிடப்பட்டு இருந்தது.

பள்ளி சான்றிதழ் அடிப்படையில் அவருடைய வயது 45 என கணக்கிட்ட தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 19,35,000 ரூபாய் இழப்பீடாக அளிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆதார் கார்டு அடிப்படையில் பார்த்தால் உயிரிழந்த நபரின் வயது 47 என்பதால் இழப்பீட்டு தொகையை 9,22,000 ஆக குறைத்தது.

பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கி வியாழக்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ர உத்தரவை ரத்து செய்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் விதித்த உத்தரவாவது,

"2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆதார் அடையாள அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில் வெளியிட்ட தகவலின் படி, ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒருவரின் பிறந்த தேதிக்கு ஆதார் ஆதாரமாக கருத முடியாது என்று கூறியுள்ளது. எனவே ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அடையாள அட்டை ஒரு ஆணவம் கிடையாது."

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Next Article