“என்றாவது ஒரு நாள் என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” - இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் "The Rise" அமைப்பு
நடத்திய உலகத் தமிழர் விருதுகள் விழா- 2025 நிகழ்வில் 5 பிரிவுகளின் கீழ்
தேர்வு செய்யப்பட்டது. இதில் அமைச்சர் கே.என்.நேரு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், தனித்துவமான சிறப்பு விருதுகள் பிரிவில் இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கு அறச் சினமும் அன்புமாகிய கலை நெருப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ், நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் :
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், “ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. இந்த படத்தில் இதை எதிர்பார்க்காதீர்கள் என மெயின் ஸ்ட்ரீம் ஆடியன்ஸை சரியாக பண்ண வேண்டும். பார்வையாளர்கள் என்ன படம் பிடிக்கிறதோ அதை தான் பார்ப்பர்கள்", என தெரிவித்தார்.
மாரி செல்வராஜ் :
தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில், "திரைப்பட விருது விழாவிற்காக படம் எடுக்கும் போது சில விஷயங்கள் சமரசம் செய்ய சொன்னார்கள். படம் குறித்து இவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் என நினைப்பார்கள்? அதையெல்லாம் யோசித்து நான் என்னுடைய தனித்தன்மையை இழந்து விடுகிறேன். பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்ளவில்லை அது வேறு விஷயம். ஆனால், என்னுடைய படத்தை என்றைக்காவது ஒரு நாள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். இப்படி படம் பண்ணாத என பத்து பேர் சொல்வார்கள், ஆனால் படம் பார்ப்பவர்கள் கோடி பேர்", என்று கூறினார்.