Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி: ஷிவ் நாடார் பவுண்டேஷனுடன் பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம்!

11:16 AM Feb 22, 2024 IST | Web Editor
Advertisement

பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து,  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்,  அமைச்சர் அன்பில் மகேஸ்  முன்னிலையில் சென்னை,  தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் (Shiv Nadar Foundation) இணைந்து,  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

மேலும்,  'மணற்கேணி' செயலியை,  கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

"இன்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு,  பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6 ஆம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  மணற்கேணி செயலி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  Web portal இல் கொண்டு வந்து கணினியில் பார்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒரு concept எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும்.  செய்முறை கல்வியை 4 ஆம் வகுப்பு வரை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.  கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் டெக்னாலஜியை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தது.  அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறோம்.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான டார்கெட்டை அதிகம் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.  நாளை அது முடிவு செய்யப்படும்.  இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்து 1.5 லட்சம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கோடை காலம் தொடங்கியதால் ஷாமியான அமைப்பது,  குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.  பொதுவாக 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை இருப்பார்கள்,  இன்னும் முழு டேட்டா இல்லை.  ஹால் டிக்கெட்டை மறந்து விட்டு பதற்றம் அடைய கூடாது என்று,  அதை தேர்வு எழுதும் போது கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.

தேர்வில் ஒவ்வொரு முறையும்,  செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  நிதி நிலைமை சீர் அடையும் போது தேவைகள் நிறைவேற்றப்படும்.  ஏற்கனவே, மூன்று முறை அவர்களை அழைத்து பேசி உள்ளோம்.  உரிமையோடு உங்களிடம் தான் கேட்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள் அந்த உரிமையை என்றும் மதிப்போம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Anbil Mahesh PoyyamozhimanarkeniSchoolschool Studentsstudentstamil nadu
Advertisement
Next Article