Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது? -உயர் நீதிமன்றம் கேள்வி

12:30 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்
இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சிலா் சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தது.

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக, விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அமைப்புகள் சார்பில் கண்டனங்களும் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில்தான், இழப்பீடு தொகை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில்,  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

Tags :
DMKkallakurichi deathmadras HCtamil naduTN Govt
Advertisement
Next Article