Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தியாகிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் #MKStalin தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
11:44 AM Jan 30, 2025 IST | Web Editor
Advertisement

மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவர் என்பது நாம் அனைவரும் அரிந்த ஒன்று. அதுவும், ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியலும் அன்பு வழியிலும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த இவரை, இன்னும் எவ்வளவு வருடம் ஆனாலும் இந்தியர்கள் மறக்க மாட்டார்கள்.

Advertisement

1869ஆம் ஆண்டு பிறந்த இவர் 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலைடில்லி பிர்லா மாளிகை தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது நினைவு தினம் இன்று அனசரிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் | Tik Tok-ல் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்!

காந்தியடிகளின் 78வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

Advertisement
Next Article