Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் தனுஷின் பிறந்தநாள் : 'ராயன்' BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

10:12 AM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஓட்டி, 'ராயன்' திரைப்படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியீட்டுள்ளது.

Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை இறுதிப் போட்டி – 8வது முறையாக பட்டத்தை வெல்லுமா இந்தியா?

‘ராயன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளான இன்று, அவர் இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் BTS காட்சிகளை நள்ளிரவு 12 மணியளவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில் ராயன் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குநர் தனுஷ் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
AparnaBalamuraliARRahmanBTSVideoCinemaUpdateDhanushDhanush50dhanushbirthdayDusharaVijayanRaayanSelvaraghavan
Advertisement
Next Article