வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!
01:02 PM Dec 23, 2023 IST
|
Web Editor
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு களம் கண்டன. இந்த நிகழ்வை புதுப்பாளையம், காரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர். அசம்பாவிதம் ஏதும் விழாவில் நடைபெறாமல் இருப்பதற்காக புதுப்பாளையம்
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
செங்கம் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
இந்த நிகழ்வில் மிக வேகமாக குறிப்பிட்ட எல்லையை குறித்த நேரத்தில் கடந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களாக பீரோ கட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Article