Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

03:15 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் செல்ல இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வரின் அமெரிக்க பயணம் இருக்கும் எனவும், அமெரிக்காவில் முக்கியமான பல நிறுவனங்களில் தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாகவும், பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவல் முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் சென்று வந்தது குறுப்பிடத்தக்கது.

Tags :
AmericaMK StalinTN Govt
Advertisement
Next Article