Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்..!

08:31 PM Nov 08, 2023 IST | Jeni
Advertisement

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11-ம் தேதிகளில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழி சாலை வழியாக கிளாம்பாக்கம் செல்லும் என்றும், கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்துகள் புறப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தேதிகளில் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை, காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு - இத்தனை லட்சமா..?

கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் நின்று செல்லும் என்பதால் பயணிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள், வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHANGEChennaiDiwaliOmniRouteTransport
Advertisement
Next Article