Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் உமர் அப்துல்லா!

09:42 AM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார்.

Advertisement

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. செப்.18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.

இதில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் முதலமைச்சராக உள்ளார். கூட்டணி தலைவராக அவர் பதவியேற்கிறார்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்.11) ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநரை சந்தித்த உமர் அப்துல்லா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் நாளை பதவியேற்க அழைப்பு விடுத்து, உமர் அப்துல்லாவுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, நாளை பதவியேற்கிறார் உமர் அப்துல்லா. அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

Tags :
CHIEF MINISTERJammu and KashmirOmar AbdullahUnion Territory
Advertisement
Next Article