Olympics 2024 : எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர்?
ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர் என்கிற பட்டியல் குறித்து விரிவாக காணலாம்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டிகள் இன்று முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒலிம்பிக்ஸ் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11மணி அளவில் நடைபெற உள்ளது.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை;
- குத்துச்சண்டை 6
- மல்யுத்தம் 6
- கோல்ஃப் 4
- டென்னிஸ் 3
- செயிலிங் 2
- நீச்சல் 2
- குதிரையேற்றம் 1
- ஜூடோ 1
- துடுப்புப் படகு 1
- பளுதூக்குதல் 1
- தடகளம் 29
- துப்பாக்கி சுடுதல் 21
- ஹாக்கி 19
- டேபிள் டென்னிஸ் 8
- பாட்மின்டன் 7
- வில்வித்தை 6