Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை - நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!

07:20 AM Feb 06, 2024 IST | Jeni
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை தருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதையும் படியுங்கள் : திருப்பதியில் படப்பிடிப்பு நிறைவு - கோவா செல்லும் தனுஷ் 51 படக்குழு..!

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணி வரை ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags :
ChennaiECIElection2024ElectionCommissionOfIndiaParliamentElection2024
Advertisement
Next Article