Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகான இந்திய அணியல் ஆடும் லெவனை சஞ்சய் மஞ்ரேக்கர் வெளியிட்டுள்ளார்.
07:30 PM Feb 05, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிள் கொண்ட தொடரில் வெளயாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Advertisement

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி , ரோஹித் ஷர்மா , ரவீந்திர ஜடேஜா , கேஎல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் விளையாடுவதால் இப்போட்டி மீது பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை நாக்பூரில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் வீரர்களை இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர் மிடில் ஆர்டரில் விராட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வு செயத இந்தியா அணி : ரோஹித் ஷர்மா(கேப்டன்), சுப்மன் கில்(துணை கேப்டன்), விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்தீக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

Tags :
ENGLANDIndiaindia teamindvsengodiOneday cricketsanjay manjrekar
Advertisement
Next Article