மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!
மொஹரம் பண்டிகையை ஒட்டி ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் வரும் முதல் மாதமாகும். இது இஸ்லாமிய புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய பண்டிகைகளை அடுத்து இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாக மொஹரம் பண்டிகை உள்ளது.
இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை – இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற தமிழர்!
இறுதி நாளான இன்று பத்து நாட்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சாவை தலையில் சுமந்தபடி தீயில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பெண்கள் தங்களது கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தீயில் உப்பு மிளகு ஆகியவற்றை தெளித்து வழிபட்டனர். மாவட்டம் முழுவதும் சில பகுதிகளில் மொஹாரம் பண்டிகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.