Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற கூட்டத் தொடர் எப்போது?

12:56 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

ஜூன் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும்,  ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.  அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

இந்த நிலையில்,  ஜூன் 3வது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்வுக்கு பின்னர் ஜூன் 20ம் தேதி குடியரசுத் தலைவர் உரை ஆற்றுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Election2024Elections ResultsElections Results 2024Elections2024Lok Sabha Election
Advertisement
Next Article