NZvsPak 2வது டி20 - பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து!
நியூஸிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்து 2வது டி20 போட்டி டுனெடினில் இன்று(மார்ச்.18) நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டதால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து 136 ரன்களை இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக டிம் சீபர்ட் 45 ரன்களையும் , பின் ஆலன் 38 ரன்களையும், மிட்செல் ஹே 21 ரன்களையும் எடுத்திருந்தனர். 5 விக்கெட்டுகளை இழந்து 13.1 ஓவரில் 137 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.