Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போக்குவரத்து விதிகளை மீறினால் புதிய முறையில் அபராதம் வசூல்… #Police அதிரடி!

12:10 PM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டால், இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சமீபத்தில் இதற்கான அபராத தொகைகளும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனங்கள் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் பலரும் ஈடுபட்டே வருகின்றனர்.

இதனிடையே, சிக்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னையில் மட்டும் தினமும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன.

அவ்வாறு வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்படும் நபர்கள் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, பேடிஎம், உள்ளிட்ட சேவைகள் மூலம் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தும் நடைமுறை கடந்த 2017 ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டால், இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் என பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வசதியை சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, எஸ்பிஐ வங்கியுடன் சோ்ந்து அறிமுகம் செய்துள்ளது. அதாவது, அபாராதம் செலுத்த வேண்டிய நபர்கள் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற இணையத்தளம் வாயிலாக அபராதத் தொகையினை செலுத்தலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று தெரிவித்தது.

Tags :
Chennaifinenews7 tamilNews7 Tamil UpdatesQR CodeTrafic RulesTransaction
Advertisement
Next Article