Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இனி UPI பேமெண்ட் செய்து டிக்கெட் வாங்கலாம் | சென்னை பஸ்களில் புதிய வசதி வந்திருக்கு தெரியுமா...!

08:41 AM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு சோதனை அடிப்படையில் சென்னையில் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதாவது, முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் காா்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கி இருக்கிறது.

தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் காா்டு மற்றும் யுபிஐ, க்யூஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு சென்னையிலுள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement
Next Article