Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுப் பொலிவுடன் பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் - டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்!

03:23 PM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

தீக்கிரையான புகழ்பெற்ற பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் புதுப் பொலிவுடன் வருகிற டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 860 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல் ஆகும். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரும்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீயை தீயணைப்பு துறையினர் அணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.  இதனைத் தொடர்ந்து 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின்  கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாரிஸ் நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயத்தின் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து வருகிற டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேவாலயத்திற்கு வருகை தரும் விசுவாசிகளுக்காக 1,500 முதல் 2,000 எண்ணிக்கையிலான நாற்காலிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ஆலயத்தில் வண்ணம் பூசப்பட்டு முன்பு இருந்தது போன்ற வண்ணங்களையும் புதுப் பொழிவையும் மீண்டும் பெற்றுள்ளன. ஆலயத்தில் உட்புறத்தில் உள்ள ஆறு முக்கிய கண்ணாடி ஜன்னல்களை பொருந்த டேனியல் ப்யூரன், ஹெர்வ் டி ரோசா மற்றும் சீனாவின் யான் பெய்-மிங் உள்ளிட்ட   110 கலைஞர்கள் ஜன்னல்களை போட்டியிட்டனர்.

நோட்ரே-டேமில் ஒரே நேரத்தில் 2,500 பேர் மற்றும் ஒரு நாளைக்கு 40,000 வந்து செல்ல முடியும்.  இது வெர்சாய்ஸ் அரண்மனையின் எண்ணிக்கையை விட இருமடங்கு பெரியது மற்றும் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் மக்களை விட ஒரு நாளைக்கு 10,000 பேர் அதிகமாக வருகை தருவார்கள் என தேவலாயத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
churchFranceNotre-Dame CathedralParis
Advertisement
Next Article