அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு, ஜல்லிக்காட்டுவளவு, மந்திவளவு ஆகிய பகுதிகளில் 50 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கவில்லை. சரப்பங்கா நதியின் ரயில்வே பாலத்தில் நான்கு வழிகள் உள்ளது. இதில் கடைசி வழியில் பாதை அமைத்து கொடுப்பதாக அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் தேர்தலுக்கு தேர்தல், வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகின்றனர். மேலும், சரபங்கா நதியில் தடுப்பணை கட்டாமல் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
இதனையடுத்து அதிகாரிகள் முறையாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூட்ட அரங்கிற்கு
அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை
நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் எழுத்து பூர்வ
உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம மக்கள்
கூறும் போது எங்கள் பகுதி, தொகுதியின் கடை கோடியில் இருப்பதால், யாரும் எங்கள்
கிராமத்தை கண்டுகொள்வது இல்லை.
இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப கொண்டு சென்றனர்.