”தேசம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை” - பிரதமர் மோடி பேச்சு..!
மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்,
"நவி மும்பை சர்வதேச விமான நிலையமானது இந்தியா வளர்ந்த நாடாவதை பிரதிபலிக்கும் ஒரு திட்டமாகும். இந்த புதிய விமான நிலையத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளுடன் இணைக்கப்படுவார்கள். இது முதலீடுகளையும் புதிய வணிகங்களையும் இந்தப் பகுதிக்கு ஈர்க்கும்.
மும்பை இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றாகும். காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கியதற்கு காரணம். காங்கிரஸின் பலவீனமே பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. மத்திய உள்துறை மந்திரியாக இருந்த ஒரு காங்கிரஸ் தலைவர், 2008 இல் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் இராணுவ பதிலடியை ஒரு நாடு தடுத்தது என்று கூறியுள்ளார். கட்சி அதனை தெளிவுபடுத்த வேண்டும்”
என்று தெரிவித்தார்.