Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஓய்வு குறித்து யோசிக்கவில்லை...  உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்" - ரோகித் சர்மா பேச்சு!

06:20 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement
ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை என்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றும் இந்திய அணியின் தற்போதைய  கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். 

 

Advertisement

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார்.  அவரை இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக நீக்கியது.  அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

இருப்பினும் ரோகித் சர்மா சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார்.  இதுவரை மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடிய அவர், 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது.  இந்த நிலையில், பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.  அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது:  "உண்மையில் ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை.  ஆனால், வாழ்க்கை உங்களை எங்கு கூட்டிச் செல்லும் என்பது தெரியாது.  நான் நன்றாக விளையாடி வருகிறேன்.

இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன்.  50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.  50 ஓவர் உலகக் கோப்பையே உண்மையான உலகக் கோப்பை.  50 ஓவர் உலகக் கோப்பைகளைப் பார்த்து நாம் வளர்ந்தோம்.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறுகிறது.  கண்டிப்பாக அதற்கு நாங்கள் தகுதி பெறுவோம்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.  இறுதிப்போட்டிக்கு முன்பு வரை நாங்கள் நன்றாக விளையாடினோம்.  அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதும் என நினைத்தேன்.  இறுதிப்போட்டி எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது.

இறுதிபோட்டிக்கு முன்பு வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது.  அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த நாள் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.  இறுதிப்போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை."

இவ்வாறு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

Tags :
ரோகித் சர்மாCricketIndian Team CaptainRohit sharmaworld cup
Advertisement
Next Article