Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை" - ஆஸி. வீரர் கிளன் மேக்ஸ்வெல்

09:27 PM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை என ஆஸ்திரேலிய அணி வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார்.  அதேபோல, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் 3-வது டி20 போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்திய மேக்ஸ்வெல் தற்போது ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

இந்த நிலையில, டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை தனக்கு இருப்பதாக கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

"நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை. நான் ஆஸ்திரேலிய அணிக்காக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன்.  ஒயிட்-பால் கிரிக்கெட் விளையாடும் டைமிங் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது".

இவ்வாறு ஆஸி. வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல், இதுவரை வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Tags :
#AustraliaCricketTeam#SportsAllRounderAustralianCricketerCricketcricketerGlenMaxWellICCWorldCupNews7Tamilnews7TamilUpdatesTestcricketWhiteBallWorldCup2023
Advertisement
Next Article