Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூக்கால் டைப்பிங் - தனது சாதனையை தானே முறியடித்த இந்தியர்!

11:56 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

வினோத் குமார் சவுத்ரி கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள எழுத்துக்களை மூக்கின் மூலம் வேகமாக தட்டச்சு செய்து புதிய  சாதனையை படைத்துள்ளார்.  சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

Advertisement

இந்தியரான வினோத் குமார் சவுத்ரி (44)  முதலில் 2023 இல் 27.80 வினாடிகளில் டைப் செய்தார்.  அதே ஆண்டு தனது இரண்டாவது முயற்சியில், 26.73 வினாடிகளில் டைப் செய்து சாதித்தார்.  இந்த முறை வெறும் 25.66 வினாடிகளில் அனைத்து எழுத்துகளையும் மூக்கால் தட்டச்சு செய்து சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வினோத் புதிய உலக சாதனை படைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.  "உங்கள் மூக்கால் எவ்வளவு விரைவாக தட்டச்சு செய்ய முடியும்?" என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், வினோத் தனது மூக்கால் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதை காணலாம்.
இந்த உலக சாதனைக்காக வினோத், QWERTY கீபோர்டில் ஆங்கில எழுத்துக்களை கேபிட்டலில்  தட்டச்சு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் ஒரு ஸ்பேஸையும் டைப் செய்ய வேண்டும்.   இவர், "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று பெயர் பெற்றுள்ளார்.  மூக்கால் தட்டச்சு செய்வதைத் தவிர,  எழுத்துக்களை ஒற்றைக் கையால் பின்னோக்கி தட்டச்சு செய்வது (5.36 வினாடி),  கீபோர்டை முதுகுக்குப் பின்னால் வைத்து தட்டச்சு செய்வது (6.78 வினாடி) போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "எனது தொழில் தட்டச்சு செய்வதுதான்.  அதனால்தான் அதில் கின்னஸ் உலக சாதனையை பதிவு செய்ய நினைத்தேன்.  வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகளை எதிர்கொண்டாலும்,  இந்த ஆர்வத்தை மட்டும் எப்போதும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.

 

Tags :
Guinness world recordGWCIndiantyping
Advertisement
Next Article