Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

07:40 PM Apr 20, 2024 IST | Web Editor
Advertisement

வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. 

Advertisement

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது.  இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதன்படி வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில், 'ஹவாசால்-1 ரா-3' என்ற சக்திவாய்ந்த ஏவுகணையையும், விமானத்தை தாக்கி அழிக்கும் 'பியோல்ஜி-1-2' என்ற ஏவுகணையையும் நேற்றைய தினம் வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இதனையடுத்து, வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப போர்க்கருவிகளில் தொழில்நுட்பங்களை புகுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த இரு சோதனைகளும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
Cruise MissileMissile testnorth korea
Advertisement
Next Article