Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NobelPrize | ஜப்பான் தொண்டு நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

03:00 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவு தினமான டிச 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.

https://twitter.com/NobelPrize/status/1844664354932932630

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (அக்.11) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதற்கு அந்த அமைப்பு எடுத்து வரும் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
news7 tamilNihon HindankyoNobel Peace PrizeNobel PrizeNobel Prize2024
Advertisement
Next Article