Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“யார் தடுத்தாலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்பேன்” - ஹர்பஜன் சிங் உறுதி!

09:46 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தி ராமர் கோயிலுக்கு, யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் தடுத்தாலும் நான் நிச்சயமாக விழாவுக்கு செல்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் நாளை மறுநாள் (ஜன. 22) பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம்,  அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவை மத்தியில் ஆளும் பாஜக எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான துருப்பு சீட்டாக பயன்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு, தனது குடும்பத்தினருடன் அக்கோயிலுக்கு செல்வதாக அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, “ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு யார் செல்கிறார்கள், யார் செல்லவில்லை என்ற விவரம் எனக்கு வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அன்று சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் நான் செல்வது உறுதி. இந்த விவகாரத்தில் இதுதான் எனது நிலைப்பாடு. நான் அங்கு செல்வதில் யாருக்காவது பிரச்னை இருந்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் தடுத்தாலும் நான் நிச்சயமாக விழாவுக்கு செல்வேன். இந்த நேரத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது நமது பாக்கியம். நான் நிச்சயம் சென்று பகவான் ராமரின் ஆசியை பெறுவேன். அனைவரும் அதை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
AyodhyaayothiconsecrationHarbhajan SinghNews7Tamilnews7TamilUpdatesRam JanmbhoomiRam LallaRam Mandirram templeRamLalla
Advertisement
Next Article