டெலிவரி பாய், வீட்டு பணியாளர்கள் லிப்டை பயன்படுத்தக்கூடாது - மீறினால் ரூ.1000 அபராதம் என அதிர்ச்சி அளித்த நோட்டீஸ்....
அடுக்குமாடி கட்டிடத்தின் லிப்டில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டி சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ஏனெனில் வீட்டு பணியாளர்கள் மற்றும் டெலிவரி பாய் லிப்ட் பயன்படுத்தியதற்காக அபராதம் செலுத்துமாறு கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், வீட்டு உதவியாளர்கள், டெலிவரி பாய்ஸ் மற்றும் பணியாளர்கள் லிப்டைப் பயன்படுத்தினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஒரு X பயனர் பகிர்ந்து கடுமையான வார்த்தைகள் கொண்ட இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
இந்த பதிவு, வெளியானதிலிருந்து, இது பாரபட்சமான நடத்தை என்று சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீட்டுவசதி சங்கத்தின் முடிவை பலர் விமர்சித்து வருவதோடு இது போன்ற நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறிவருகின்றனர்.