#JammuKashmir தேர்தலில் போட்டியில்லை - மெகபூபா முஃப்தி அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட போவதில்லை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஆக. 26ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
“ இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது 12,000 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய என்னால் முடிந்தது. அதேபோல அமைதி ஒப்பந்தத்தை முதலமைச்சர் பதவியில் இருந்த என்னால் அமல்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிவிட்டதால் அதன் முதலமைச்சருக்கு எவ்வித பெரிய அதிகாரமும் இருக்காது.