Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது, ஆனால் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் -இஸ்ரேல்

08:56 AM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று மீண்டும் அறிவித்துள்ள இஸ்ரேல், அதேநேரத்தில் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement

அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

காசா நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.
அதற்காக, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்வதாகவும் ராணுவம் கூறியது.
அதையடுத்து, கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும் அந்த நகரிலிருந்து ஏராளமானவா்கள் தெற்குப் பகுதியை நோக்கி செவ்வாய்க்கிழமை வெளியேறினா். இருந்தாலும், அந்த நகரம் உள்பட வடக்கு காஸா பகுதியில் இன்னும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருப்பதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று மீண்டும் அறிவித்துள்ள இஸ்ரேல், அதேநேரத்தில் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article