“திரைப்பட இயக்கத்தில் நடிகர் தனுஷ் கிங்...." - நடிகர் சரவணன்!
தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர் நடிகர் தனுஷ். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50-வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து 2வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
"தனுஷ் இயக்கத்தில் நான் நடித்த முதல் படம். அவருடன் நடிப்பதும் இதுவே முதல்முறை. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் தனுஷிடம் நட்பாக பேசலாம். ஆனால் இயக்குநர் தனுஷிடம் அப்படி பேச முடியாது. அவரை இயக்குநராக பார்த்தாலே பயமாக உள்ளது.
எந்த நடிகராலும் தனுஷ் போல படத்தை இயக்க முடியாது. படத்தை இயக்குவதில் நடிகர் தனுஷ் கிங்" என்றார்.