Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை

04:32 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய நீதித்துறைக்கே சவால் விடும் நித்யானந்தாவின் சொத்துகளை பாதுகாக்க வேண்டுமா? என நித்தியானந்தாவின் சீடர் சுரேகா தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த சுரேகா (நித்தியானந்தாவின் சீடர்) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில் சுரேகா ஆகிய என் மீதும் மேலும் இரு நபர்கள் மீதும் மோசடி பிரிவில் சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில் அபகரிக்க முயன்றதாக 4 பிரிவின்கீழ் சுரேகா, தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் நாங்கள் அது போன்று எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை பொய்யான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி மனுதாரர் நிலத்தை அபகரிக்கும்
எந்தவித செயல்களிலும் ஈடுபடவில்லை இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அப்பொழுது மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இடத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு
தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்
உள்ளது. நித்தியானந்தாவின் சீடர்கள் இவரை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற செயல்களில்
ஈடுபடுவதால் இவர்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

அப்பொழுது நீதிபதி, நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்தியன் ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால் அவரது சொத்துக்களை இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் இந்த இட விகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்திரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தார்.

Tags :
BailKailasanews7 tamilNithyanandaTheni
Advertisement
Next Article