சதம் அடித்து ‘புஷ்பா’ பட பாணியில் கொண்டாடிய நிதீஷ் ரெட்டி- மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத தந்தை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 4வது டெஸ்டியில் சதம் அடித்தார் நிதிஷ் ரெட்டி, இப்போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்த அவரின் தந்தை மனமுருகி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரும் சிக்கலில் இருந்தபோது சிறப்பாக ஆடிய அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.
இவர், 8வது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை வசமாகியுள்ளது. அடுத்ததாக, இந்திய அணிக்காக மிக இளம் வயதில் சதமடித்த மூன்றாவது கிரிக்கெட் பிளேயர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர், இரண்டாவது இடத்தில் ரிஷப் பந்த் இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து, நித்ஷ் ரெட்டியும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
நிதீஷ்குமார் 100 ரன்களை அடித்ததும் மைதானத்தில் இருந்த நிதீஷ்குமார் ரெட்டியின் அப்பா உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, ஆனந்த கண்ணீரில் மூழ்கினார்.