Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவை பாராட்டிய நிர்மலா சீதாராமன்...!

01:04 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

"மேக்னஸ் கால்சனுக்கு எதிராக தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்" என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.  

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.


இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் உரையில் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  "மேக்னஸ் கால்சனுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்"  என  பாராட்டு  தெரிவித்தார்.  

Tags :
Praggnanandhaa | chess game | Education | Scheme | Budget 2024 |
Advertisement
Next Article