Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

04:09 PM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

நீலகிரி மாவட்டம் அரையட்டி பகுதியானது யானை, சிறுத்தை, கரடி, புலி, மான், உள்ளிட்ட வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.  அண்மை காலமாக குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூர் கிராமப்புற பகுதிகளில் சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகவே உள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை (ஜன.3) தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை சதீஷ் என்ற இளைஞரை தாக்கியது. இதில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டத்திற்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
ChettahNilagiriTamilNadu
Advertisement
Next Article