Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகி விருதை வென்ற நிக்கி பிரசாத்!

மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப் பெற்றது.
09:04 AM Feb 16, 2025 IST | Web Editor
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நாட் சீவர் பிரண்ட் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement

டெல்லி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். நிக்கி பிரசாத் 35 ரன்னும், சாரா பிரைஸ் 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அறிமுக ஆட்டத்திலேயே அசத்தலாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட நிக்கி பிரசாத் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
Cricketdelhi capitalsMumbai IndiansWomen's Premier League
Advertisement
Next Article