Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை உட்பட பல இடங்களில் #NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!

08:30 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கை  வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர்.

அதாவது மருத்துவர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப்,  முகமது அலி உமாரி ஆகிய 6  பேரையும் போலீசார் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை, தாம்பரம், கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
NIAtamil nadu
Advertisement
Next Article