காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் - நவ. 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை காவிரி ஒழுங்காற்றுக் குழு, ஆணையத்துக்கு பரிந்துரைத்து வருகிறது.
இதற்கு முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27 ஆவது கூட்டம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில், நவம்பர் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கவும் , காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கவும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த கூட்டம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதா? அடுத்த மாதத்திற்கு எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.