நியூஸ்7 செய்தி எதிரொலி - மாஞ்சோலை பகுதியில் இலவச வாகன வசதி!
நியூஸ்7 தொடர் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை மலைகிராம மக்கள் கட்டணம் இன்றி அழைத்து செல்லப்படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை , நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மணிமுத்தாறு முதல் குதிரை வெட்டி கோதையாறு என்று மலை உச்சத்திற்குச் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்பட்டது.
தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை, 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலையை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்துவிட்டது. இதனையடுத்து, சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைக்கிராம மக்களின் சிரமங்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு, அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது. அதன் எதிரொலியாகப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான முதற்கட்ட அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது.
இதையும் படியுங்கள் : போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு!
அதனைத்தொடர்ந்து, மலைப் பாதையின் சாலை சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், மலைச்சாலை பணிகள் 11 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
இந்நிலையில், சாலைகளில் அரசு பேருந்து இயங்க முடியாத சூழல் உள்ளதால் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நியூஸ்7தமிழ் செய்தி வெளியிட்டது. நியூஸ்7தமிழ் செய்தி எதிரொலியாகப் வனத்துறை வாகன மூலம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மலை கிராமங்களுக்கு மக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், வழக்கமான கட்டணத்தை வசூலித்து விட்டு தான் வனத்துறை செயல்பட்டது.
இதையடுத்து நேற்று தமிழ்நாடு புலிகள் காப்பகங்களில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் செண்பகப்பிரியா இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று முதல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மலை கிராமங்களுக்கும் மலை கிராமங்களில் இருந்து கல்லிடைகுறிச்சி கட்டணம் இன்றி அழைத்து செல்லப்படுகின்றனர்.