Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

11-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நியூஸ் 7 தமிழ் - #DMDK பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

11:04 AM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

நியூஸ் 7 தமிழ் 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது. வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.

நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான "பொறுப்பும் பொதுநலனும்" என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.

நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான் ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு,  விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும் தான். இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

11வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்து தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

"நியூஸ்7 தமிழ் (NEWS 7 TAMIL) தொலைக்காட்சி 11-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில் பேர், புகழ், செல்வாக்கு மற்றும் மக்களிடையே வரவேற்பை பெற்று சிறந்த முறையில் பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மேன்மேலும் வளர்ச்சியடைந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற வேண்டுமென எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
11 Years of News 7 Tamilநியூஸ் 7 தமிழ்DMDKNEWS 7 TAMIL
Advertisement
Next Article