Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரையிறுதியில் நியூசி. அணி அதிரடி - தென்னாப்பிரிக்காவுக்கு அசாத்திய இலக்கு நிர்ணயம்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டியில் 363ரன்கள் என்கிற அசாத்திய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நியூசி. அணி நிர்ணயம் செய்துள்ளது.
07:24 PM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரைஇறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

Advertisement

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி, வரும் 9ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதும். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதலே ரன்களை சேர்க்க தொடங்கினர். நியூஸி. அணி 43ரன்கள் எடுத்த நிலையில் வில் யங் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரச்சினும், கேன் வில்லியம்சனும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 108ரன்களும், கேன் வில்லியம்ஸன் 102 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் தங்களது பங்கிற்கு சில ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த டேரில் மிட்சலும், பிலிப்ஸும் தங்களது பங்கிற்கு நிதானமாக விளையாடி 49ரன்கள் சேர்த்தனர். டேரில் மிட்சல் 49ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பிலிப்ஸ் 49ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 50ஓவர்களின் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 362 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசி. அணியின் இந்த ரன்கள் எண்ணிக்கை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அதிபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இங்கிலாந்து அணி 351ரன்கள் அடித்த நிலையில் அதனை சேஸ் செய்து ஆஸி. அணி 356ரன்கள் குவித்து வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆஸி அணியை பின்னுக்கு தள்ளி நியூசி. அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

Tags :
நியூசிலாந்து அணிநியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்காஅரை இறுதிஇந்தியா vs ஆஸ்திரேலியாகேன் வில்லியம்சன்கிரிக்கெட் போட்டிகடாபி ஸ்டேடியம்ரச்சின் ரவீந்திராஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைசாம்பியன்ஸ் கோப்பை 2023NewzelandSA vs NZSouth Africa
Advertisement
Next Article