Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டம் - மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

04:42 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

Advertisement

2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மும்பை மாநில அரசு இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளது. அதே நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது விருந்து நடைபெறும் ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:

குடிபோதையில் விபத்துகள் அல்லது விரும்பதகாத சம்பவம் நடைபெறாத வகையில் விருந்தினர்களுக்கு மதுபானம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும். விருந்தினர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

குடிபோதையில் இருப்பவர்கள் வீடு செல்வதற்கு வசதியாக மாற்று ஓட்டுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். விருந்தில் மது அருந்த முறையான அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்கப்பட வேண்டும். இதற்காக அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவகங்களில் பேனர்கள் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
2025BarHotelMumbaiNewYearRestrictionsrules
Advertisement
Next Article