Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபாஸுக்கு ஜோடியாகும் ’சீதாராமம்’ பட நடிகை - ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட்.!

01:30 PM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.1,100 கோடி வசூலித்து பட்டையை கிளப்பியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட், சலார் 2 மற்றும் ராஜா சாப் உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

'ஸ்பிரிட்' படம் பிரபாஸின் 25-வது படமாகும். இதனை 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சைப் அலிகான் - கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில், தற்போது இப்படம் முக்கிய குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்பிரிட் படத்தில் பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2026-ம் ஆண்டு 8 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
KAREENAKAPOORMIRUNAALTHAAKOORmoviePrabhasSAIFALIKAANSandeepReddyVangaSPIRITupdate
Advertisement
Next Article