Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபல மலையாள நடிகருடன் மீண்டும் இணையும் நயன்தாரா - லேட்டஸ்ட் அப்டேட்!

05:21 PM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.  தமிழில் ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நயன்தாரா,  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிசில் கோடிகளை அள்ளிக் குவித்து இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது.  மேலும், ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில், அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தற்போது, இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா வெளியிட்டுள்ளனர். 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகின்றனர்.

Tags :
George PhilipMalayalam filmmovieNAYANDHARANivin PaulyPosterSandeep Kumar
Advertisement
Next Article