Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்!

09:17 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Advertisement

இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது .  இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி (Story) வசதியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இமேஜ் ஜெனரேசன் (Image generation) AI தொழில்நுட்பம் மூலம்,  ஒரு புகைப்படத்தில் உள்ள பின்னணியை மாற்றி புதிதாக புகைப்படங்களை உள்ளிட முடிகிறது.

இதையும் படியுங்கள்:  ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் டிசம்பர் 18-ம் தேதி தொடக்கம்!

அதாவது, சாதாரணமாக ஒருவர் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தில் இந்த புதிய AI தொழில்நுட்பத்தின் மூலம் நாய்குட்டிகளுக்கு நடுவில் படுத்திருப்பது போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும்.   இதற்கு பெரிய வழிமுறைகள் எதுவும் தேவையில்லை. வெறும் 'சுற்றி நாய்குட்டிகள் இருக்க வேண்டும்' (Surrounded by puppies) என தெரிவித்தால் போதுமானது.  மீத வேலையை இந்தத் தொழில்நுட்பம் செய்து முடிக்கிறது.

இந்த இமேஜ் ஜெனரேசன் எனப்படும் AI தொழில் நுட்பத்துடனான வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  விரைவில் மற்ற இடங்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags :
aiImage GenerationinstagramMetanews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article