Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஏழு கடல் ஏழு மலை' ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

02:17 PM Dec 19, 2024 IST | Web Editor
Advertisement

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் குறித்த வெளியாகியுள்ளது.

Advertisement

நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்தாண்ட தொடக்கத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து டிரான்சில்வேனியா திரைப்பட விழாவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது.

ஜனவரி மாதம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் இக்காட்சிகள் பரவலாக பேசப்பட்டன. ராமின் முதல் படமான கற்றது தமிழ் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கருத்துக்களை பகிர்ந்தனர். இதன் பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 2025-ல் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
Director RamMovieUpdateNews7Tamilnews7TamilUpdatesNivin PaulyReleaseDateYezhu Kadal Yezhu Malai
Advertisement
Next Article