Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய வகை கொரோனா - மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

11:24 AM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

புதிய வகையான கொரோனா 'ஜெஎன்.1' பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

உருமாறிய புதிய வகையான கொரோனா 'ஜெஎன்.1' ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளத்தில் கண்டறியப்பட்டதையடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீவிர கண்காணிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் சுதான்ஷு பந்த் கடிதத்தில் கூறியதாவது,

"மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது உயிரிழப்புகளை குறைக்க முடிந்தது. இருப்பினும் உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்ந்து பரவி வருகின்றன.

இதையும் படியுங்கள் : ஊரை சூழ்ந்த வெள்ளம் | மலைக் கோயிலில் தஞ்சம் அடைந்த கிராம மக்கள்! நியூஸ் 7 தமிழ் பிரத்யேக தகவல்!

அண்மையில் கேரள மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. புதிய வகை கொரோனா  'ஜெஎன்.1'- ஆல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த டிசம்பர்.8-ஆம் தேதி கேரளத்தில் கண்டறியப்பட்டார். முன்னதாக திருச்சியிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இதே புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

நாட்டில் பண்டிகை காலம் வருவதையொட்டி தொற்றின் பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். மேலும் தீவிர கண்காணிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

மாவட்டந்தோறும் இன்ப்ளூயன்ஸா மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்புகள் குறித்து கண்காணிப்பதுடன் தினசரி அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் ஆர்டி- பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது பிஏ.2.86 வகை கொரோனா 'ஜெஎன்.1' கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் ஜெஎன்.1 வகை கொரோனா  பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான சான்றுகள் இல்லை. எனவே நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளாலும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளாலும் இவ்வகை கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க இயலும்"

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் சுதான்ஷு பந்த்  தெரிவித்துள்ளார்.

Tags :
AlertCentral GovtCoronaNew TypeStatesGovt
Advertisement
Next Article